Friday 5 October 2018

சீனா எதிர் தாய்லாந்து | சீனாவின் உலக சாதனை | ஐ.சி.சி உலக இ-20 ஆசியா "பி" பிரிவு தகுதிகாண் சுற்று 2018

ஐ.சி.சி உலக இ-20 ஆசியா "பி" பிரிவு தகுதிகாண் சுற்று 2018 தற்போது மலேசியாவில் இடம்பெற்று வருகிறது. அக்டோபர் 3ஆம் திகதி முதல் அக்டோபர் 12ஆம் திகதி வரை இந்த சுற்றுத்தொடர் இடம்பெறும். ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இந்த தொடர் மலேசியாவில் இடம்பெறுகிறது. 7 அணிகள் 21 போட்டிகளில் விளையாடுகின்றன. 

ஐ.சி.சி உலக இ-20 ஆசியா "பி" பிரிவு தகுதிகாண் சுற்று 2018 கிழக்கு உப பிராந்திய சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டி மலேசியாவில் அக்டோபர் 3ஆம் திகதி இடம்பெற்றது. இந்த போட்டியில் சீனா மற்றும் தாய்லாந்து அணிகள் எதிர்த்தாடின. 




முதலில் துடுப்பெடுத்தாடிய சீனா 20ஓவர்களில் 9விக்கெட் இழப்புக்கு 35ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. அதிக பட்சமாக வாங் யா (Wang Ya) 8 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் தாய்லாந்து வீரர் ஜேக்கப்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

சீனா அணித்தலைவர் சென் எக்ஸியோரன் மற்றும் வாங் யா ஆகியோர் மட்டும் தலா ஒவ்வொரு நான்கு ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இருபது-20 சர்வதேச போட்டிகளில் இது இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும். 




பதிலளித்தாடிய தாய்லாந்து அணி 2.4ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்களைப் பெற்றது. ஜேக்கப்ஸ் 19 ஓட்டங்களையும் ஷஃபிகுல் ஹக் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தாய்லாந்து அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. 

சீனா 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இணைந்து கொண்டதுடன் இவ்வருட ஆரம்பத்தில் முழுமையான இருபது-20 சர்வதேச அந்தஸ்த்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

சீனா எதிர் தாய்லாந்து | சீனாவின் உலக சாதனை | ஐ.சி.சி உலக இ-20 ஆசியா "பி" பிரிவு தகுதிகாண் சுற்று 2018 
http://sigaram7.blogspot.com/2018/10/China-vs-Thailand-t20-WC-Qualify-2018.html 
#ACC #ICC #T20I #China #Thailand #WT20 #icc_world_twenty20_2020 #Australia #Cricket #CricketScores #TamilCricket #Aus #CricketAustralia #SigaramNEWS 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...