Friday 5 October 2018

சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணம் 2020 - அவுஸ்திரேலியா - ஒரு பார்வை

சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணம் 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை இடம்பெறும். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் இடம்பெறவுள்ள இத்தொடரில் 16 அணிகள் பங்குபற்றுகின்றன. 

போட்டியை நடத்தும் நாடான அவுஸ்திரேலியா நேரடியாக சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் 31 டிசம்பர் 2018 திகதியன்று ஐ.சி.சி இருபது-20 தரவரிசையின் அடிப்படையில் 1 முதல் 9ஆம் இடத்தைப் பெறும் (அவுஸ்திரேலியா தவிர) ஒன்பது அணிகள் சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறும். ஏனைய ஆறு அணிகளும் தகுதிகாண் போட்டிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். 



ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் கிழக்காசியா - பசுபிக் என ஐந்து பிராந்தியங்களில் இருந்து மொத்தம் 62 அணிகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ளன. இவற்றில் இருந்து எட்டு அணிகள் மட்டும் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும். 2018 பிப்ரவரி 26ஆம் திகதி முதல் தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. 

ஐந்து பிராந்தியங்களும் பன்னிரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு குழுக்களிலும் முன்னிலை பெறும் 25 அணிகள் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பிராந்திய தகுதிகாண் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும். இவற்றில் இருந்து எட்டு அணிகள் 2020ஆம் இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும். 

2016ஆம் ஆண்டு  இருபது-20 உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய 16 அணிகளில் இருந்து 2018.12.31ஆம் திகதி நிலவரப்படி ஐ.சி.சி இருபது-20 தரவரிசைப் பட்டியலில் 11 முதல் 16 வரையான இடங்களைப் பெறும் ஆறு அணிகளும் 2020ஆம் இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளில் விளையாட வேண்டும். 

2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள இறுதிக்கட்ட தகுதிகாண் போட்டிகளில் மொத்தம் பதினான்கு அணிகள் விளையாடும். அவற்றில் முதல் ஆறு இடங்களைப் பெறும் அணிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணம் 2020 தொடரில் விளையாடத் தகுதி பெறும். 

மொத்தமாக 78 அணிகள் 2020ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச இருபது-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்காகப் போராடுகின்றன. மாபெரும் இருபது-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள அந்த 16 அணிகள் எவை? பொறுத்திருந்து பார்க்கலாம். 

சர்வதேச இருபது-20 உலகக்கிண்ணம் 2020 - அவுஸ்திரேலியா - ஒரு பார்வை  
http://sigaram7.blogspot.com/2018/10/ICC-World-T20-2020-Australia-a-view.html 
#ICC #WT20 #Australia #T20IRankings #ICCWT20_2016 #T20I #MRFTyresICCRanking #RegionalQualifiers2018 #RegionalFinals2019 #TamilCricket #SigaramNews

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...