Wednesday 19 September 2018

ஆசியக் கிண்ணம் 2018 | போட்டி 04 | இந்தியா எதிர் ஹாங்காங்

போட்டி 04 - இந்தியா எதிர் ஹாங்காங்  
குழு A  
18/09/2018, செவ்வாய்க்கிழமை 
துபாய் 

ஹாங்காங் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பைத் தேர்வு செய்தது. 

முதல் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
இந்தியா - 285/7 (50.0) 

ஷிக்கர் தவான் - 127 (120) - (15x4, 2x6) 
அம்பதி ராயுடு - 60 (70) - (3x4, 2x6) 
தினேஷ் கார்த்திக் - 33 (38) -  (3x4, 0x6) 

பந்து வீச்சு 
ஹாங்காங் 

கிஞ்சித் ஷா - 09 ஓவர் - 39 ஓட்டம் - 03 விக்கெட் 
எஹசான் கான் - 10 ஓவர் - 65 ஓட்டம் - 02 விக்கெட் 



இரண்டாம் இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் 
ஹாங்காங் - 259/8 (50.0) 

நிசாகத் கான் - 92 (115) - (12x4, 1x6) 
அன்ஷுமன் ரத் - 73 (97) - (4x4, 1x6) 

பந்து வீச்சு 
இந்தியா 

கலீல் அஹ்மத் - 10 ஓவர் - 48 ஓட்டம் - 03 விக்கெட் 
யுஸ்வேந்திர சஹல் - 10 ஓவர் - 46 ஓட்டம் - 03 விக்கெட் 

இந்திய அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

ஆட்ட நாயகன் - ஷிக்கர் தவான் 

ஹாங்காங் அணி பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் ஆசியக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இலங்கை அணியைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக ஹாங்காங் வெளியேறுகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் Super 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன. முதல் சுற்றில் மீதமிருக்கும் இந்தியா எதிர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் போட்டிகள் Super 4 சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பதை மட்டுமே தீர்மானிக்கவிருக்கின்றன. 

ஹாங்காங் அணியின் துடுப்பாட்டத்தின் போது 49 ஓவர் முடிவில் 256 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 6 பந்துகளுக்கு 30 ஓட்டங்கள் தேவை. இருபது-20 போட்டியின் இறுதிக்கட்டம் போலவே பரபரப்பான எதிர்பார்ப்பு அந்த இறுதி ஓவரின் மீது காணப்பட்டது. 

ஆனால் முதல் பந்திலேயே எட்டாவது விக்கெட்டை ஹாங்காங் இழந்தது. தொடர்ந்து வந்த பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். இறுதி வரை ஹாங்காங் போராடியது சிறப்பு. புதிய அணியாக இருந்தாலும் இறுதிவரை பரபரப்பாக போட்டியை நகர்த்திச் சென்றதே அவர்களின் வெற்றி. 

பாகிஸ்தானுக்கு எதிராக 116 ஓட்டங்களுக்குள் சுருண்ட ஹாங்காங் அணி இந்தியாவுக்கு எதிராக 5.18 என்னும் ஓட்ட விகிதத்தில் 259 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை நிரூபித்தது. 

ஐந்தாவது போட்டியான இந்தியா எதிர் பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் யுத்தமாக இதனைக் காண்கிறோம். வெல்லப்போவது யார்? காத்திருங்கள். 

#AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #India #Hongkong #BCCI #Pak #Cricket #Scores #UAE #StarSports #IndvHK #IndvPak #AskTheExpert #TamilSports 

No comments:

Post a Comment

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | நியூஸிலாந்து அணி விபரம்

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  நியூசிலாந்து அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  கேன் வில்லிய...